Wednesday, July 13, 2011

இளைய மற்றும் புதிய பதிவர்கள் ஒவ்வோருவரையும் அழைக்கிறோம்



2007 ஆம் ஆண்டின் கடைசியில் ஏதோ ஒருநாள்.. பதிவராக நான் ஃபார்ம் ஆகத் துவங்கி இருந்த நேரம். டாக்டர்.புருனோவின் இடுகை ஒன்றில் பதிவர் சந்திப்பு என்று பார்த்தேன். பிறகு நம்ம லக்கி,பாலபாரதி,டோண்டுசார் போன்றோரின் பதிவுகளிலும் அதே விசயம் இருந்தது. ஓஹோ பதிவர்கள்கூடி அப்பப்ப மீட்டிங் எல்லாம் போடுறாங்களா! நல்ல விசயமா இருக்கேன்னு போக முடிவு செய்தேன். புது பதிவரான எனக்கு அப்போது செல்ல மிகவும் தயக்கம். காரணம் பிரபலமான இந்தப் பதிவர்கள் எல்லாம் நம்மிடம் பேசுவார்களா என்பதே உணர்ந்தறிய முடியாத விஷயமாக இருந்தது. தயக்கம் இருந்தாலும், சிறிது யோசித்தாலும் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்போல அந்தச் சந்திப்பிற்குச் சென்றேன்.

இன்றைக்கு என்னோடு இரண்டறக் கலந்துவிட்ட என் உறவுகளான கேபிள்,முரளிகண்ணன்,வெண்பூ,பரிசல்காரன்,புருனோ,அதிஷா போன்ற பலரையும் முதன்முதலில் அன்றுதான் சந்தித்தேன். இதில் அண்ணன் முரளிகண்ணன் பதிவுலகில் எங்களுக்கு மிகவும் மூத்தவர். சென்னை ஐஐடியில் இயந்திரப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். சக தோழனாக,சகோதரனாக எனக்கு இந்த நொடிவரை தோளோடு தோள்வரும் அவரை முதன்முதலில் சந்தித்தபோது இவரெல்லாம் நம்மோடு பழகுவாரா என்ற எண்ணம் மறைந்து இவர் உண்மையிலேயே ஐஐடிதானா? என்ற எண்ணம்தான் வந்தது. அன்றைய பதிவர் சந்திப்பை தயக்கத்தில் நான் உதறி இருந்திருந்தால் பெரும் நட்புகளையும் அதனால் எனக்குக் கிடைத்த மானசீக பலத்தையும் இன்றும் இழந்திருப்பேன். அதன் பின்னர் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை பதிவர் சந்திப்புகள் தொடர்ந்து நடந்து வந்தது.நானும் சென்றுகொண்டு இருந்தேன். என்ன காரணமோ இடையில் கடந்த ஓராண்டாக பதிவர் சந்திப்புகள் சென்னையில் இல்லாமலேயே போய்விட்டது.

2009 ஆம் ஆண்டு ஜூன்வரை பதிவுலகிற்கு வந்தவர்களில் பெரும்பாலானோரைத் தெரியும். ஆனால் அதன் பின்னர் வந்தவர்களை பன்னிக்குட்டி ராமசாமி,பனங்காட்டுநரி,ஆயிரத்தில் ஒருவன் மணி,சிரிப்புபோலிஸ், செளந்தர், தேவா மற்றும் இன்னும் பலரை இடுகைகளின் வாயிலாக,பின்னூட்டம் வாயிலாக அறிய முடிகின்றதே தவிர யாருடனும் நேரடிப் பழக்கம் இல்லாமல் போய்விட்டது. நேரடிப் பழக்கம் என்ன... தொலைபேசிப் பழக்கம்கூட இல்லை. அதற்குக் காரனம் கடந்த ஓராண்டாக பதிவர் சந்திப்புகள் இல்லாமல் போனதுதான்.இளைய மற்றும் புதிய பதிவர்கள் யாரெல்லாம் சென்னையில் இருக்கின்றீர்களோ அவர்களையெல்லாம் நேரில் காண விரும்புகிறேன்.வாங்கய்யா பழகுவோம்.


நிகழ்ச்சி: சென்னை பதிவர் சந்திப்பு

நாள்:16.07.2011

இடமும் நேரமும்: சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை பின்புறம் (மாலை 5:30 முதல் 7 வரை), கடற்கரை அருகில் உள்ள தேநீர் கடை (7 முதல் 9 வரை)


தொடர்பிற்கு :

கேபிள் சங்கர் : 9840332666
ஜாக்கி சேகர் : 9840229629
புதுகை அப்துல்லா : 9381377888
அதிஷா : 9500061607

5 comments:

ஷர்புதீன் said...

அண்ணே என் சார்பா என்னோட படத்தை பிடிச்சிக்கிட்டு நம்ம பதிவர்கள் யாராவது வருவார்கள்., பின்னே கோவையில் குடிவந்துவிட்ட பதிவராச்சே :-(

புதுகை.அப்துல்லா said...

ஷர்புதீன்ங்குற பேருக்கெல்லாம் பிராக்ஸி கிடையாது :)

ஷர்புதீன் said...

அண்ணே ரண்டு வருசமா மொக்கை போடுறேனே, பிராக்சி கிடையாதா? :-(

வவ்வால் said...

Chinna pulla thanama irukke, tea shopla nadathina evan varuvan? Oru tasmac kadai theriyatha? Naasama pogattum intha meet lol!

இவன் said...

அப்துல்லா அண்ணே... இந்தமுறை ஏதாவது பதிவர் சந்திப்பு இருக்கா?? நான் ஒரு புதுப்பதிவர்... உங்கள் உதவி கிடைக்குமா??

Post a Comment